×

கோர்ட்டில் இருந்து 3 கைதிகள் ஓட்டம்

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிங்கிரிபாளையத்தில் உள்ள கரியகாளியம்மன் மற்றும் மகா மாரியம்மன் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள மேற்குபதியை சேர்ந்த சகோதர்களான சேது (25), அய்யப்பன் என்கிற அஜித் (24), மற்றும் பரணி (19) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வேறு ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பாக சிறுவலூர் போலீசார் 3 பேரையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்த சேது, அஜித் மற்றும் பரணி ஆகியோரை போலீசார் கோபி குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் உணவு சாப்பிட்டு இருந்த சேதுவும், அஜித்து அங்கிந்து தப்பி ஓடிவிட்டனர். இதேபோல் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அபிஷேக கட்டளை தெருவை சேர்ந்த குருமாறன்(23). கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இவரை போலீசார் திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நேற்று முன்தினம் மாலை அழைத்து வந்தனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் போலீஸ்காரர் ராஜேசை கைகளால் தாக்கி விட்டு குருமாறன் தப்பி ஓடி விட்டார். இவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

The post கோர்ட்டில் இருந்து 3 கைதிகள் ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Gobi ,Kariyakaliamman ,Maha Mariyamman ,Singripalayam ,Gopi ,Erode ,Sethu ,Ayyappan ,Vaghripathi ,Gunnathur ,Tirupur district ,
× RELATED கோபி அருகே ஒத்தக்குதிரையில்...